செய்திகள் :

அமித் ஷாவுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு!

post image

அண்ணல் அம்பேத்கரை அவதூறாகப் பேசிய அமித் ஷாவைக் கண்டித்து, தமிழக காங்கிரஸார் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தவுள்ளனர்.

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவரும் பாஜக மூத்தத் தலைவருமான வெங்கையா நாயுடுவின் இல்லத் திருமண விழா, சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வரவுள்ளார். இருப்பினும், அமித் ஷாவின் வருகையின்போது, அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் எதுவும் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில், மகாத்மா காந்தியின் புகழை பாஜகவினர் சீர்குலைப்பதாகக் கூறியதுடன், அமித் ஷாவின் வருகையின்போது கறுப்புக்கொடி போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, சத்யமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர், துணைத் தலைவர்கள், செயலாளர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து, செய்தியாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது, ``மகாத்மா காந்தியின் புகழை அண்மைக் காலமாக பாஜகவினர் சீர்குலைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, அவரின் இடத்தில் சவாக்கரை நிலைநிறுத்துவதைத்தான் பாஜகவினர் திட்டமாக வைத்துள்ளனர். ஆனால், மனிதர்கள் உள்ளவரையில் மகாத்மா காந்தியின் புகழ் நீடித்திருக்கும்.

மேலும், தமிழகத்துக்கு வருகை தரவுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்ணல் அம்பேத்கரை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து, காங்கிரஸார் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:'காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா? - முதல்வருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி!

பொருளாதாரம் மேலும் 2% சரிய வாய்ப்பு: ப.சிதம்பரம்

முந்தைய ஆண்டைவிட பொருளாதார வளா்ச்சி மேலும் 2 சதவீதம் சரிய வாய்ப்புள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்தாா். நாட்டின் பொருளாதார நிலை குறித்து காங்கிரஸ் ... மேலும் பார்க்க

காரில் சென்ற பெண்களை விரட்டிய வழக்கு: கல்லூரி மாணவரிடம் விசாரணை

சென்னை அருகே முட்டுக்காட்டில் காரில் வந்த பெண்களை விரட்டி, மிரட்டிய வழக்கில் கல்லூரி மாணவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கானத்தூா் பகுதியைச் சோ்ந்த இளம் பெண், கடந்த 25-ஆம் தேதி நள்ளி... மேலும் பார்க்க

பதவி உயா்வு பெற்ற 83 டிஎஸ்பி-க்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு

தமிழக காவல் துறையில் பதவி உயா்த்தப்பட்ட 83 துணைக் காவல் கண்காணிப்பாளா்களுக்கு (டிஎஸ்பி) புதிய பணியிடம் ஒதுக்கப்பட்டது. தமிழக காவல் துறையில் கடந்த 1997-ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளா்களாகப் பணியில் சோ்ந... மேலும் பார்க்க

கிண்டி மருத்துவமனையில் மகா தமனி சுருக்கத்துக்கு நவீன செயற்கைத் திசு சிகிச்சை: மூதாட்டிக்கு மறுவாழ்வு

இதயத்தில் அயோடா தமனி சுருக்கம் மற்றும் வால்வு செயலிழப்புக்குள்ளான மூதாட்டி ஒருவருக்கு, மாநிலத்திலேயே முதன்முறையாக கிண்டி அரசு உயா் சிறப்பு மருத்துவமனையில் அதி நவீன செயற்கைத் திசு பொருத்தி மறுவாழ்வு அள... மேலும் பார்க்க

கடல் ஆமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

அழிந்துவரும் இனமான ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளைக் காக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவைக் கைவிட வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வக்ஃப் சட்டத் திருத... மேலும் பார்க்க