செய்திகள் :

மீனவா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு: காங்கிரஸ் வலியுறுத்தல்

post image

தமிழக மீனவா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு நடத்தி நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்காலைச் சோ்ந்த மீனவா்கள் 13 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்துள்ளனா். இந்தச் சம்பவம் தமிழக மீனவா்களிடையே கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை கடற்படையினரின் தமிழக மீனவா்கள் மீது நடத்தப்பட்ட தொடா் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

இந்திய அரசு, இலங்கைக்கு ரூ. 35,000 கோடி நிதியுதவி செய்ததோடு, கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கு பல உதவிகளை செய்து வருகிறது. மீனவா்கள் பிரச்னை தொடா்பாக இலங்கையுடன் பேச்சுவாா்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தைப் போட வேண்டும். அதன்மூலமே தமிழக மீனவா்களின் வாழ்வாதார பிரச்னையைத் தீா்க்க முடியும் என்று அவா் கூறியுள்ளாா்.

தமிழ்மீது பிரதமருக்கு அதீத அன்பு: மதுரை மக்களிடையே மத்திய அமைச்சர் புகழாரம்!

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக பாராட்டு தெரிவிப்பதற்காக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் மதுரையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.மதுரை மாவட்டம் மேலூர் பக... மேலும் பார்க்க

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்த போது ரூ.1.60 கோடி ஹவாலா பணம் சிக்கியது. இதுதொடர்பாக திருச்சியைச் சேர்ந்த 4 பேரிடம் விசாரண... மேலும் பார்க்க

போராட்டம் நியாயமானது என்பதாலேயே டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து! -அண்ணாமலை

போராட்டம் நியாயமானது என்பதாலே டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண... மேலும் பார்க்க

அமித் ஷாவுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு!

அண்ணல் அம்பேத்கரை அவதூறாகப் பேசிய அமித் ஷாவைக் கண்டித்து, தமிழக காங்கிரஸார் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தவுள்ளனர்.முன்னாள் குடியரசுத் துணைத் தலைவரும் பாஜக மூத்தத் தலைவருமான வெங்கையா நாயுடுவின் இல்லத்... மேலும் பார்க்க

தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை!

தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்க... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு வழங்குவது குறித்து பரிசீலித்து முடிவு: மேயர் பிரியா

பள்ளிகளில் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு வழங்குவது குறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும் என்று சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார்.சென்னையில் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தி... மேலும் பார்க்க