செய்திகள் :

Mental Health: உங்களுக்கு மன அழுத்தம் இருக்கா; இல்லையா..? கண்டுபிடிக்க ஒரு டெஸ்ட்!

post image

'டென்ஷன்’ - இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை. அந்த அளவுக்கு வீட்டிலும், வெளியிலும், எங்கேயும், எப்போதும் டென்ஷனும் நம்முடனே பயணிக்கிறது. டென்ஷனாக இருக்கும்போது, வேலையில் ஈடுபாடின்மை, நம்பிக்கையின்மை, தன்னம்பிக்கைக் குறைதல், தூக்கப்பிரச்னை என மன அழுத்தத்துக்கான அறிகுறிகளும் ஆரம்பமாகிவிடுகின்றன. கடந்த இரண்டு வாரங்களில் உங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு, கீழ்க்காணும் கேள்விகளுக்குப் பதிலை மனதுக்குள் 'டிக்’ செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா; இல்லையா என்பதை உங்கள் பதில்களே சொல்லி விடும்.

mental health

1. எந்த ஒரு காரியத்தையும் விருப்பமின்றி செய்தீர்களா?

அ. இல்லை, முழு ஈடுபாட்டுடன் செய்தேன்

ஆ. ஒரு சில நாள்கள் மட்டும் (1 முதல் 3 நாட்கள்)

இ. கிட்டத்தட்ட பாதிநாட்கள் (4 முதல் 7 நாட்கள்)

ஈ. பெரும்பான்மையான நாட்கள் விருப்பமின்றிச் செய்தேன் (8 முதல் 14 நாட்கள்)

2. மனம் தளர்ந்து, சோர்வாக இருப்பதாக உணர்ந்தீர்களா?

அ. இல்லை.

ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது.

இ. பாதி நாட்கள் அப்படித்தான்.

ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்.

Mental health

3. தூங்குவதில் சிரமம் அல்லது போதுமான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டீர்களா?

அ. இல்லை

ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது

இ. பாதி நாட்கள் அப்படித்தான்

ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்

4. சோர்வாகவோ அல்லது குறைந்த ஆற்றலுடன் இருப்பதுபோலவோ உணர்ந்தீர்களா?

அ. இல்லை

ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது

இ. பாதி நாள்கள் அப்படித்தான்

ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்

relax

5. பசியின்மை அல்லது அதிகமாகச் சாப்பிடுதல் பிரச்னை இருந்ததா?

அ. இல்லை

ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது

இ. பாதி நாட்கள் அப்படித்தான்

ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்

6. தோல்வியுற்ற, தன்னைத்தானே வெறுக்கின்ற உணர்வு ஏற்பட்டதா?

அ. இல்லை

ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது

இ. பாதி நாள்கள் அப்படி ஏற்பட்டது

ஈ. கிட்டத்தட்ட எல்லா நாள்களும்

Reading

7. செய்தித்தாள் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற சின்னஞ்சிறு விஷயங்களில்கூட சரியாக கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதா?

அ. இல்லை

ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது

இ. பாதி நாள்கள் அப்படி இருந்தது

ஈ. கிட்டத்தட்ட எல்லா நாள்களும்

8. மற்றவர்கள் கவனிக்கும் அளவுக்கு மிக மெதுவாகப் பேசுகிறீர்களா? வேலை செய்கிறீர்களா? அல்லது அளவுக்கு அதிகமாகப் பரபரப்புடன் இருக்கிறீர்களா?

அ. இல்லை

ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது

இ. பாதி நாள்கள் அப்படித்தான் நடந்துகொண்டேன்

ஈ. கிட்டத்தட்ட எல்லா நாள்களும்

mental health

9. வாழ்க்கையை வெறுத்து தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் மனநிலை ஏற்பட்டதா?

அ. இல்லை

ஆ. சில தினங்கள் அப்படித் தோன்றியது

இ. பாதி நாள்கள் அப்படி இருந்தது

ஈ. கிட்டத்தட்ட எல்லா நாள்களும்

(அ- 0, ஆ-1, இ-2, ஈ-3 மதிப்பெண்கள்)

மதிப்பெண் 0 - மனஅழுத்தம் இல்லாதவர் நீங்கள். இந்த நிலையைத் தக்கவைத்துக்கொண்டால், நீங்கள்தான் மகிழ்ச்சியான நபர்.

1 முதல் 4 வரை - மிகக் குறைந்த மனச்சோர்வு. மன அழுத்தத்தைக் குறைக்கும் எளிய பயிற்சிகள் செய்யுங்கள். யோகா, தியானம், உடற்பயிற்சிகள் உங்கள் மனச்சோர்வை நீக்கப் பயன்படும்.

5 முதல் 14 வரை - மனச்சோர்வு. மன அழுத்தம் என்பது எல்லோருக்கும் தோன்றுவதுதான் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். எனவே, மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

Happy Living (Representational Image)

15 முதல் 19 வரை - சற்றே அதிகமான மனச்சோர்வு.

20 முதல் 27 வரை - அதிகமான மனச்சோர்வு- நீங்கள் உங்களையே காயப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு மனநிலை கொண்டவராக இருப்பதால் மனநல மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Doctor Vikatan: தனக்குத்தானே பேசிக்கொள்ளும் மாமனார்: முதுமைதான் காரணமா... சிகிச்சை அவசியமா?

Doctor Vikatan:என் மாமனாருக்கு 75 வயதாகிறது. மாமியாரும் அவரும் தனியே வசிக்கிறார்கள். சமீப காலமாக என் மாமனார் தனக்குத்தானே பேசிக்கொள்கிறார். வெளியே செல்லும்போதும் இதைச் செய்கிறார். மறைந்திருந்து பார்த்... மேலும் பார்க்க

Mental Health: ``கூச்சப்படாதீங்க.. மனம் விட்டு அழுதிடுங்க" - மருத்துவர்கள் சொல்வதென்ன?

உடல் வலி மற்றும் மனவலியை வெளிப்படுத்தும் முக்கியமான வடிகால் கண்ணீர்; அதை ஒருபோதும் அடக்கிவைக்காதீர்கள் என்கிறது மருத்துவ உலகம்.கண்கள்Health: இந்தப் பிரச்னைக்கு உங்க ஹேண்ட்பேக்கூட காரணமா இருக்கலாம்!சரி... மேலும் பார்க்க

Doctor Vikatan: சாட்டையடி, உண்ணாவிரதம்.... தன்னைத்தானே வருத்திக்கொள்வது எத்தகைய மனநிலை?

Doctor Vikatan: பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளும் கட்சியை எதிர்த்து, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்ட நிகழ்வை செய்திகளில் பார்த்தோம். சாட்டையால் அடித்துக்கொள்வது, உண்ணாவிரதம் இருப்பது என தன்னைத்தானே வர... மேலும் பார்க்க

Brain Rot என்பது என்ன? - இளைஞர்கள் 'விழித்துக்கொள்ள' வேண்டிய நேரமிது - எச்சரிக்கும் மனநல ஆலோசகர்!

சமூக வலைதளங்களில் அதிகமாக புலங்கத் தொடங்கியிருக்கும் வார்த்தை Brain Rot. இது ஆன்லைன் வாழ்க்கைக்குள் நுழைந்திருக்கும் தலைமுறையின் மனநலம், அறிவாற்றல் பாதிப்படைவதைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆண... மேலும் பார்க்க