சாம்பியன்ஸ் டிராபி தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்து இன்று அறிவிக்கப்படவுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, வங்கதேசமும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இவற்றில் இந்தியா, பாகிஸ்தான்தவி, மற்ற நாடுகளின் அணிகள் குறித்து அறிவிக்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அணி குறித்த அறிவிப்பை, இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகார்கர், இன்று நண்பகலில் அறிவிப்பார் என்று எதிர்க்கப்படுகிறது.
இதையும் படிக்க:இந்திய அணி வீரா்களுக்கு புதிதாக கட்டுப்பாடுகள் விதித்த பிசிசிஐ
இந்திய அணியின் மிக முக்கியமான பந்துவீச்சாளரான பும்ரா தசைப் பிடிப்பால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடுவாரா என்று கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், இடது கை வீரர் என்பதால் அவரும் அணியில் இருந்தால், கூடுதல் பலமாக அமையும் என்று கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியிலும் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்பது இன்று நடக்கவிருக்கும் தேர்வுக்குழு கூட்டம் முடிந்தவுடன் தெரியவரும்.
ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்திய அணிக்கான போட்டிகள் தவிர்த்து, மற்ற போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெற உள்ளன. இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது.