செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறப் போகும் வீரர்கள் யார்?

post image

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்யும் தேர்வுக்குழு கூட்டம் நாளை (ஜனவரி 18) நடைபெறவுள்ளது.

ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்திய அணிக்கான போட்டிகள் தவிர்த்து, மற்ற போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெற உள்ளன. இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான தங்களது அணியை அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் கிட்டத்தட்ட அறிவித்துவிட்டன. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அணித் தேர்வுக்குழு கூட்டம் அஜித் அகர்கர் தலைமையில் நாளை (ஜனவரி 18) நடைபெறுகிறது.

இதையும் படிக்க: ரஞ்சி கோப்பையில் விராட் கோலி விளையாடுகிறாரா?

ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறுவாரா?

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின்போது, தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசவில்லை.

இந்திய அணியின் மிக முக்கியமான பந்துவீச்சாளரான பும்ரா தசைப் பிடிப்பால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாட முழு உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் அணியில் இடம்பெறுவாரா? மாட்டாரா? என்ற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ரோஹித் சர்மா அணியை கேப்டனாக வழிநடத்துவார் எனக் கூறப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சியை முன்கூட்டியே ரோஹித் சர்மா தொடங்கிவிட்டார்.

இதையும் படிக்க: எப்போது ஓய்வு பெறவேண்டும் என்பதை ரோஹித் சர்மாவே முடிவு செய்வார்: முன்னாள் இந்திய வீரர்

யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெறுவாரா?

23 வயதாகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் அற்புதமான ஃபார்மில் இருக்கிறார். இடது கை வீரர் என்பதால் அணிக்கு அது கூடுதல் பலமாக அமையும். அவர் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறுவாரா என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்திய அணியின் டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருப்பதால், அணியில் இடம்பெறுவதற்கான போட்டி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் இடையே கடுமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரையும் அணியில் தேர்வு செய்வது தேர்வுக்குழுவுக்கு மிகவும் சவாலாக இருக்கும்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பளித்து, கே.எல்.ராகுலுக்கு சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட வாய்ப்பளிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: இந்திய அணிக்காக விளையாடும் எண்ணம் இன்னும் இருக்கிறது: கருண் நாயர்

இந்திய அணியின் பிரதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பந்த் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது. இரண்டாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தெரிவாக துருவ் ஜுரெல் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

கருண் நாயருக்கு வாய்ப்பு கிடைக்குமா?

விஜய் ஹசாரே தொடரில் கருண் நாயர் மிகவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இந்த தொடரில் இதுவரை 752 ரன்கள் விளாசியுள்ளார். அவரது சராசரி 752 என நம்பமுடியாத விதமாக இருக்கிறது. இதுவரை 5 சதங்களும் விளாசியுள்ளார்.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், இந்திய அணியில் நடுவரிசை ஆட்டக்காரர்கள் குவிந்து கிடக்கிறார்கள். குறிப்பாக, ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பிடிக்கும் போட்டியில் இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வேண்டுமானால் கருண் நாயர் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது.

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவ் காயத்திலிருந்து மீண்டு, பந்துவீச்சு பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதனால், சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறுவதற்கு அவர் தயாராக இருக்கிறார்.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சியில் ரோஹித் சர்மா!

வேகப் பந்துவீச்சாளர்களை பொருத்தவரையில், முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்து சிறப்பாக பந்துவீசி வருகிறார். முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் போன்ற வீரர்களும் வரிசையில் இருக்கிறார்கள். பிரசித் கிருஷ்ணா சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியிலும் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்பது நாளை தேர்வுக்குழு கூட்டம் முடிந்தவுடன் தெரியவரும்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

எப்போது ஓய்வு பெறவேண்டும் என்பதை ரோஹித் சர்மாவே முடிவு செய்வார்: முன்னாள் இந்திய வீரர்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை ரோஹித் சர்மாவே முடிவு செய்வார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய அணி பார்டர... மேலும் பார்க்க

டாப் ஆர்டர் சொதப்பல்; பாகிஸ்தானை சரிவிலிருந்து மீட்ட சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் குவித்துள்ளது.பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான முதல் டெ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி: இறுதிப்போட்டியில் இந்தியா!

மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. ... மேலும் பார்க்க

ரஞ்சி கோப்பையில் விராட் கோலி விளையாடுகிறாரா?

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலி ரஞ்சி கோப்பையில் தில்லி அணியில் இடம்பெற்றுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவட... மேலும் பார்க்க

ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக்குவது பிற்போக்குத்தனம்..! மிட்செல் ஜான்சன் ஆவேசம்!

இலங்கை தொடரில் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமிப்பது பிற்போக்குத்தனமானது என முன்னாள் ஆஸி. வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கருத்து தெரிவித்துள்ளார். பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸி. 3-1 என வென்றதால... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சியில் ரோஹித் சர்மா!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. இதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பிய... மேலும் பார்க்க