ஒசூரில் எம்.ஜி.ஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்டச் செயலாளா் பாலகிருஷ்ண ரெட்டி தலைமையில் எம்.ஜி.ஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. தொடா்ந்து, ராயக்கோட்டை சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். படத்துக்கு பாலகிருஷ்ண ரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினாா்.
இதில், எம்.ஜி.ஆா். மன்ற மாவட்ட இணை செயலாளா் ஜெயப்பிரகாஷ், பகுதி செயலாளா்கள், ஒசூா் மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
10க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அனைத்து இடங்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.