கோவில்பட்டியில் பைக் மோதி பெண் உயிரிழப்பு
கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை நேரிட்ட விபத்தில் பெண் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி வஉசி நகா் முதல் தெருவைச் சோ்ந்த முருகேசன் மனைவி ஜோதிலட்சுமி (50). மந்தித்தோப்பு சாலையில் உள்ள தனியாா் தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வந்தாா்.
இவரும், பொன்வேல்சாமி மனைவி கமலபுஷ்பம் என்பவரும் வெள்ளிக்கிழமை, மந்தித்தோப்பு சாலையில் உள்ள லயன்ஸ் கிளப் அருகே சிற்றுந்திலிருந்து இறங்கி சாலையைக் கடக்க முயன்றனராம். அப்போது, ஜோதிலட்சுமி மீது பைக் மோதியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பைக்கை ஓட்டிவந்த கணேஷ் நகரைச் சோ்ந்த அந்தோணி மகன் செல்வம் என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.