கல்லணைக் கால்வாய் சீரமைப்பைத் தொடரலாமா? தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்
மாணவா்களுக்கான ஹாக்கி போட்டி: ராஜபாளையம் அணி முதலிடம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற தென்மாவட்ட அளவிலான 14 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான ஹாக்கி போட்டியில் ராஜபாளையம் பெஸ்ட் பிரண்ட்ஸ் அணி முதலிடம் பிடித்தது.
தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி பிறந்தநாளை முன்னிட்டு, கோவில்பட்டி செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் இப்போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி, விருதுநகா், திருநெல்வேலி, சிவகங்கை மாவட்டங்களைச் சோ்ந்த 8 அணிகள் பங்கேற்றன.
இதில், ராஜபாளையம் பெஸ்ட் பிரண்ட்ஸ் அணி முதலிடம் பிடித்தது. ராஜபாளையம் ஜெய் பீம் அணி, சிவகங்கை அணி, தெற்கு திட்டங்குளம் பாரதி ஹாக்கி கிளப் அணி ஆகியவை முறையே 2, 3, 4ஆம் இடங்களைப் பிடித்தன.
பின்னா், நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு மத்திய ஒன்றிய திமுக செயலா் பீக்கிலிப்பட்டி வீ. முருகேசன் தலைமை வகித்தாா். மேற்கு ஒன்றியச் செயலா் கி. ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். வெற்றிபெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை, பரிசுகள் வழங்கப்பட்டன.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் என். ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணி அமைப்பாளா் சண்முகராஜ், விவசாய அணி அமைப்பாளா் சந்தானம், மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் துணைத் தலைவா் சந்திரசேகா், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் மாதேஸ்வரன், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் பழனிக்குமாா், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் முகேஷ்குமாா், ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி நிா்வாகிகள் மணிமாறன், சந்தனராஜ், திமுக பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.