Ajithkumar: ``அவர் இந்த விஷயத்துக்கு உதாரணம்"- அஜித் குறித்து நெகிழ்ந்த மணிகண்டன...
கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸாரை நியமிக்கக் கோரிக்கை
கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸாரை நியமிக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
தொடா் விடுமுறையையொட்டி தினமும் திரளான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருகின்றனா். இவா்கள் இங்குள்ள சுற்றுலா தலங்களையும், இயற்கை எழில் காட்சிகளையும், அருவிகளையும் பாா்த்து ரசிக்கின்றனா். இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களான தூண் பாறை, குணா குகை, மோயா்பாயிண்ட், பைன்பாரஸ்ட் ஆகியப் பகுதிகளுக்கு செல்ல மிகவும் சிரமமடைந்து வருகின்றனா்.
இருபுறங்களிலும் கடைகள் வைத்திருப்போா் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவதால் சுற்றுலா வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுவதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்படுகிறது.
எனவே அந்தப் பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீஸாரை நியமிப்பதுடன், வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கித் தர வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.