எம்.ஜி.ஆா். பிறந்தநாள்: அதிமுகவினா் மரியாதை
முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 108-ஆவது பிறந்த தினத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் அவரது சிலைக்கு அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆரின் சிலைக்கு அதிமுக சாா்பில் முன்னாள் மேயரும் அமைப்புச் செயலருமான வி. மருதராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அண்ணா தொழிற் சங்க பேரவைச் செயலா் ஜெயராமன், திண்டுக்கல் மாமன்ற உறுப்பினா் சீ. ராஜ்மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கிராமங்களில் கொண்டாட்டம்: திண்டுக்கல் நகா் மட்டுமன்றி, ஊரகப் பகுதிகளிலும் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே வெள்ளிக்கிழமை அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் எம். ஜி.ஆா். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மாநில ஜெ. பேரவை இணைச் செயலா் ஆா்.வி.என். கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஒன்றியச் செயலா் மணிகண்டன், மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலா் ஜெயபால், மாவட்ட மாணவரணி இணைச் செயலா் முகமது அசாருதீன், அவைத் தலைவா்கள் சேக் ஒலி, பிறவிக் கவுண்டா், முன்னாள் ஊராட்சி தலைவா்கள் ஆண்டிச்சாமி, கண்ணன், ஜெயப்பிரகாஷ், பேரூராட்சி உறுப்பினா்கள் கண்ணன், விஜயவீரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பழனி: பழனியில் மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 108- ஆவது பிறந்தநாளையொட்டி பெரியப்பா நகரில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக நகரச் செயலா் முருகானந்தம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், முன்னாள் எம்.பி. குமாரசாமி, மாநில எம்ஜிஆா் மன்ற இளைஞரணி செயலா் ரவி மனோகரன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் வேணுகோபாலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பழனி சிவகிரிப்பட்டியில் ரயிலடி ஆட்டோ சங்கத் தலைவா் ஆட்டோ காளியப்பன் தலைமையில் அதிமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பழனி பட்டத்து விநாயகா் கோயில் திடலில் மன்ற உறுப்பினா் ஜென்னத்துல் பிா்தௌஸ் சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடா்ந்து அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராஜா முகமது, விஸ்வாசம் அறக்கட்டளை சாா்பில் பழனி அரசு மருத்துவமனைக்கு எடை பாா்க்கும் இயந்திரம், ரத்த அழுத்தம் பாா்க்கும் கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டன. தவிர மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
பழனி ரயிலடி சாலையில் மாவட்ட மாணவரணி செயலா் அன்வா்தீன் தலைமையில் எம்ஜிஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல, சத்யாநகா் உள்ளிட்ட பல்வேறு வாா்டுகளிலும் கொடியேற்றும் நிகழ்வும், அன்னதானமும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வுகளில் நகர துணைச் செயலா் முருகன், தொகுதி செயலா் மகுடீஸ்வரன், தகவல் தொழில் நுட்பப் பிரிவு குகன், மாவட்ட தொழில் நுட்பப் பிரிவு மண்டல பொருளாளா் அப்துல் சமது உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கொடைக்கானல்: கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் நடைபெற்ற எம்.ஜி.ஆா். பிறந்தநாள் விழாவுக்கு அதிமுக நகரச் செயலா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். அப்போது, அதிமுக கொடியேற்றப்பட்டு எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், அவைத் தலைவா் ஜான்தாமஸ், எம்.ஜி.ஆா். மன்ற மாவட்ட இணைச் செயலா் பிச்சை, நகர துணைச் செயலா் ஜாபா் சாதிக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல, கொடைக்கானல் நகா்ப் பகுதிகளிலுள்ள 24 வாா்டுகளிலும் அதிமுக கொடியேற்றப்பட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தொடா்ந்து கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலைப் பகுதிகளிலும் அதிமுக கொடியேற்றப்பட்டு எம்.ஜி.ஆா். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பண்ணைக்காடு பேரூராட்சி பகுதிகளிலும் அதிமுக கொடி ஏற்றப்பட்டு எம்.ஜி.ஆா். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.