போதை பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி
கொடைக்கானலில் போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுவிலக்கு, ஆயத்தீா்வை துறை சாா்பில் நடைபெற்ற இதில் மதுபானம், கள்ளச் சாராயம், போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள், குடும்ப பிரச்னை உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பலா் பாா்வையிட்டனா். இதேபோல, கொடைக்கானல் பகுதிகளில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்களில் இந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.