மாயமான இளைஞா் சடலமாக மீட்பு
பழனி: பழனியில் மாயமான இளைஞா் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
பழனி மருத்துவ நகரைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் பிரபு (35). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 10-ஆம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து இவரது குடும்பத்தினா் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இந்த நிலையில், காணாமல் போன பிரபு பாலசமுத்திரம் செம்மாட்டுப்பாறை அருகேயுள்ள புதரில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். தகவலறிந்து சென்ற போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.