செய்திகள் :

வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு: அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்!

post image

புதுக்கோட்டை அருகேயுள்ள வடமலாப்பூரில் பொங்கல் பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காளைகள் விறுவிறுப்பாக வாடிவாலில் இருந்து சீறிப்பாய்ந்து வருகின்றன. காளையர்கள் அவற்றைப் போட்டி போட்டுக் கொண்டு தழுவ முயற்சித்து வருகின்றனர்.

ஒரு காளையும் அதனைத் தழுவ முயற்சித்த காளையரும் உருண்டுபுரண்ட சம்பவம் மெய்சிலிர்க்கச் செய்தது.

பிற்பகல் 3 மணி வரைரை சுமார் 600 காளைகள் அவிழ்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 230 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

சொந்த ஊர் சென்று திரும்புவோர் பயண திட்டத்தை மாற்றுங்கள்: போக்குவரத்துத்துறை

சென்னை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் சென்றிருப்பவர்கள், சென்னை திரும்புவதற்கான பயண திட்டத்தை மாற்றிக்கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் வகை... மேலும் பார்க்க

மருத்துவம், பொறியியல் படிப்புகளில் பட்டியலினத்தவர் அதிகரிப்பதாக அமைச்சர் பெருமிதம்!

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் பட்டியலினத்தவரின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் படிக்கும் அர... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பு மனு தாக்கல்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள திமுகவின் வேட்பாளர் சந்திரகுமார் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

நாளை கனமழை பெய்யும் மாவட்டங்கள் எது எது?

தமிழகத்தில் ஜனவரி 18ஆம் தேதி சனிக்கிழமை தஞ்சை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 2000 வழங்க உத்தரவிட முடியாது! உயர் நீதிமன்றம் திட்டவட்டம்!

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.பொங்கல் திருநாளையொட்டி, தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 2000 ரொக்கம... மேலும் பார்க்க

பொங்கல் விடுமுறை: கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோவை : பொங்கல் விடுமுறையையொட்டி, கோவை குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அதிகமான சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்திற்... மேலும் பார்க்க