தொழிற்கல்விப் படிப்புகளில் அருந்ததியா் மாணவா்கள் அதிகம் பயன்: அமைச்சா் மா.மதிவே...
லாஸ்லியாவின் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் வெளியீட்டுத் தேதி!
நடிகை லாஸ்லியாவின் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்து, தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
பிரன்ட்ஷிப், கூகுள் குட்டப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்த இவர், தற்போது யூடியூபர் ஹரி பாஸ்கருடன் புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஷாகித் கபூர், பூஜா ஹெக்டேவின் தேவா பட டிரைலர்!
பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸின் 101ஆவது படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
முன்னதாக, மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தின் டீசர் வெளியான நிலையில், இப்படம் ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.