செய்திகள் :

கர்நாடகா: 'வங்கியில் 10 கோடி மதிப்பிலான பொருட்கள் கொள்ளை' - 24 மணி நேரத்துக்குள் இரண்டாவது சம்பவம்!

post image

Karnataka Bank Robbery: மங்களூரு நகரில் கோடேகர் பகுதியில் உள்ள உல்லாலா கூட்டுறவு வங்கி ஆயுதம் ஏந்திய கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளையில் 10 முதல் 12 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர்.

இன்று நண்பகல் 11:30 - 12:30 இடையில் இந்த கொள்ளை நடந்ததாகவும், கொள்ளை கும்பல் நீல நிற ஃபியாட் காரில் தப்பியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் கூறுவதன்படி, 25 முதல் 30 வயதுக்கு உட்பட்ட 5,6 பேர் கொண்ட கும்பல் கை துப்பாக்கி, வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இந்த கொள்ளையை நிகழ்த்தியுள்ளனர்.

இந்தியில் பேசிய அவர்கள், அப்போது பணியில் இருந்த நான்கு, ஐந்து வங்கி உழியர்களை மிரட்டி தங்க நகைகள் இருக்கும் பெட்டகத்தை திறக்க வைத்துள்ளனர்.

தோராயமாக 10 முதல் 12 கோடி மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. முழுமையான விவரங்கள் இனிதான் தெரியவரும் என்கின்றனர்.

தங்க நகைகள் (சித்தரிப்பு படம்)

கொள்ளையர்களை பிடிக்க காவல்துறையினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். பல குழுக்களை அமைத்து கண்காணிப்பு தொழில்நுட்பம் மற்றும் கிடைக்கப்பெற்றுள்ள தடயங்கள் மூலம் தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருக்கின்றனர்.

கொள்ளை நடந்தபோது மங்களூருவில் இருந்த முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தகவல் கிடைத்த உடன் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.

மேற்கு ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அமித் சிங், மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால், போலீஸ் சூப்பிரண்டு என் யதீஷ் அகியோர் அந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

சித்தராமையா

சித்தராமையா பேசியதென்ன?

இது குறித்த அவரது பதிவில், "கோட்டேகர் உல்லாலா கூட்டுறவு வங்கியில் கொள்ளை நடைபெற்றதை அடுத்து, மங்களூருவில் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டு, குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடிக்க கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன." எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், "குற்றவாளிகள் எப்படி எளிதாக தப்பினர்? இவ்வளவு சுங்கச்சாவடிகளைத் தாண்டிவிட்டார்கள், ஏன் உடனடியாக போக்குவரத்தை இறுக்கவில்லை?" எனக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அத்துடன், "அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கடுமையான சோதனை செய்யப்பட வேண்டும். நான்கு மாவட்டங்களில் தடுப்புகள் போடப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவில் கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்." என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.

நேற்றைய தினம் கர்நாடகாவின் பிதார் நகரில் பட்டபகலில் இரண்டு ஆயுதம் ஏந்திய நபர்கள் ஸ்டேட் வங்கி ஏடிஎம்-ல், பாதுகாப்பு ஊழியரைத் தாக்கிவிட்டு 97 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துள்ளனர்.

24 மணி நேரத்துக்குள் இரண்டாவது கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் மக்கள் அச்சத்திலுள்ளனர்.

``Open AI -க்கு எதிரான ஆவணங்களை வைத்திருந்ததால் என் மகனை கொன்றுவிட்டனர்'' - சுசிர் பாலாஜியின் தாய்

சேட் ஜிபிடி செயலியை உருவாக்கிய ஓப்பன் ஏஐ (Open AI) நிறுவனம்தான் தனது மகனைக் கொலை செய்ததாக பேசியுள்ளார் சுசிர் பாலாஜியின் தாயார் பூர்ணிமா ராவ். ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் பணியாற்றிய சுசிர் பாலாஜி, நிறுவனத்... மேலும் பார்க்க

ஷாருக் கான் வீட்டையும் குறிவைப்பா... சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் கைதா? - போலீஸ் சொல்வதென்ன?

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை நேற்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து சரமாரியாகத் தாக்கியுள்ளார். கூர்மையான பிளேடால் தாக்கியதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சைஃப் அலிகானு... மேலும் பார்க்க

`காதலி கிரீஷ்மா குற்றவாளி’ - காதலனை கஷாயத்தில் விஷம் கலந்து கொலை செய்த வழக்கில் அதிரடி தீர்ப்பு

காதலனுக்கு விஷம்..!கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தின் பாறசாலையை சேர்ந்த ஜெயராஜன் - பிரியா தம்பதியின் மகனான ஷாரோன் ராஜ்(23), கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ... மேலும் பார்க்க

நீலகிரி: தொழிலாளரின் உடலை டிராக்டரில் அனுப்பிய தேயிலைத் தோட்ட நிர்வாகம்; கொதிப்பில் தொழிலாளர்கள்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள அத்தி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரி. அந்த பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ள பேரி அக்ரோ என்கிற தனியார் தேயிலைத் தோட்டத்தில் பல ஆண்டுகளாக... மேலும் பார்க்க

`தனிமையில் சந்திக்க வற்புறுத்திய மாமா' -தற்கொலை செய்துகொண்ட 24 வயதுப் பெண்! - பெங்களூரில் சோகம்!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருக்கும் குண்டலஹள்ளி மெட்ரோ அருகில் தனியார் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டல் அறையில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்த 24 வயதுப் பெண் தீக்குளித்து தற்கொலை செய்த... மேலும் பார்க்க

Nagpur: 50 மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சைக்காலஜிஸ்ட்; பிடிபட்டது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் கடந்த 15 ஆண்டுகளில் 50க்கும் மேலான மாணவிகளைப் பாலியல் ரீதியாகச் சுரண்டியதாக 47 வயது சைக்காலஜிஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றத்தில் ஈடுபட்ட நபரின் பெயரைச் சட்ட மற்றும... மேலும் பார்க்க