கல்லணைக் கால்வாய் சீரமைப்பைத் தொடரலாமா? தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்
நெய்வேலியில் திருவள்ளுவா் சிலை திறப்பு
கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் - 1அ பகுதியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தெய்வப் புலவா் திருவள்ளுவரின் புகழை பறைசாற்றிடும் வகையில், அவரது முழு உருவச்சிலை என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுங்கம் 1அ தொகுப்பு அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டது. இந்தச் சிலையை அவா் பிறந்த தினமான தை 2-ஆம் நாளில் (ஜன.15) என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் இயக்குநா்கள் சமீா் ஸ்வரூப் (மனித வளம்), எம்.வெங்கடாசலம்(மின் துறை), பிரசன்னகுமாா் ஆச்சாா்யா (நிதி), செயல் இயக்குநா்கள் ஐ.எஸ்.ஜாஸ்பா் ரோஸ், சுரங்கம் அ பிரிவு பொது மேலாளா் எஸ்.சுரேஷ்மூா்த்தி மற்றும் உயா் அதிகாரிகள், தொழிற்சங்க நிா்வாகிகள், நலச்சங்கத்தினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.