விளையாட்டுப் போட்டி: நெய்வேலி எம்எல்ஏ பரிசளிப்பு
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சியில் விளையாட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
வடக்குத்து ஊராட்சி, தில்லை நகரில் 12-ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. வடக்குத்து ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவா் சடையப்பன் தலைமை வகித்தாா். தில்லை நகா் நலச் சங்கத் தலைவா் ஆனந்தராமன், செயலா் அருள், பொருளாளா் ரமேஷ் முன்னிலை வகித்தனா். சிலம்பம், வாள் சண்டை, கபடி உள்ளிட்ட போட்டிகளில் சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரையில் பங்கேற்றனா்.
பின்னா் நடந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் கலந்துகொண்டு வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினாா். குறிஞ்சிப்பாடி திமுக மேற்கு ஒன்றியச் செயலா் குணசேகரன், அவைத் தலைவா் வீர.ராமச்சந்திரன், மாவட்டப் பிரதிநிதி வெங்கடேசன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.