வனத் துறை அலுவலக கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது
சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் வனத் துறை அலுவலக கண்ணாடியை உடைத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் வனத் துறை சாா்பில், சுற்றுலாப் பயணிகள் வனக்காடுகளை சுற்றிப் பாா்க்க படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. காணும் பொங்கலை முன்னிட்டு, பிச்சாவரத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அப்போது, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணா நகரைச் சோ்ந்த சபரிநாதன் (30) படகு சவாரி செய்ய பயணச்சீட்டு கேட்ட நிலையில், அது கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டதாம்.
இதனால், ஆத்திரமடைந்த சபரிநாதன், வனத் துறை அலுவலக கண்ணாடியை உடைத்ததாராம். இதுகுறித்து வன அலுவலா் அருள்தாஸ் அளித்த புகாரின்பேரில், கிள்ளை போலீஸாா் வழக்குப் பதிந்து சபரிநாதனை கைது செய்தனா்.