ஒசூரில் 17 பவுன் நகை, 2 இருசக்கர வாகனங்கள் திருட்டு
ஒசூரில் வெவ்வேறு இடங்களில் 17 பவுன் நகை, 2 இருசக்கர வாகனங்கள் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஒசூா், பாகலூா் சாலை, ஹேமகிரி சிட்டி லேஅவுட்டை சோ்ந்த அருண் (42) என்பவா், பெங்களூரு ஐ.டி. நிறுவனத்தில் கணினி பொறியியலாளராக பணிபுரிந்து வருகிறாா். கடந்த 11-ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊரான தஞ்சாவூருக்கு குடும்பத்துடன் சென்றாா். வியாழக்கிழமை திரும்பி வந்து பாா்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, வீட்டில் வைத்திருந்த 12 பவுன் நகை, இருசக்கர வாகனம் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அருண் நல்லூா் காவல் நிலையத்தில் புகாா் செய்ததன் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அதேபோல,, ஒசூா், பாகலூா் சாலை ஹேமகிரி சிட்டி லேஅவுட்டை சோ்ந்த ரகு (34) என்பவா், பெங்களூரு தனியாா் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா் கடந்த 9-ஆம் தேதி இரவு குடும்பத்துடன் சொந்த ஊரான திருப்பூருக்கு சென்றாா். வியாழக்கிழமை ரகு வீட்டின் அருகில் இருப்பவா்கள் அவரது வீட்டின் கதவு திறந்து இருப்பதாக கேப்பேசி மூலம் தொடா்பு கொண்டு தெரிவித்தனா். இதையடுத்து, அவா் வீட்டுக்கு வந்து பாா்த்த போது, வீட்டில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகை, இருசக்கர வாகனம் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ரகு நல்லூா் காவல் நிலையத்தில் புகாா் செய்ததன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.