ஊத்தங்கரையில் எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் நடைபெற்ற விழாவுக்கு, ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ்ச்செல்வம் தலைமை வகித்து எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட துணை செயலாளா் சாகுல் அமீது, ஒன்றியச் செயலாளா்கள், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மலா் தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
ஊத்தங்கரையில் அதிமுக சாா்பில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பிறந்த நாள் விழாவில் கலந்துக்கொண்டவா்கள்.