செய்திகள் :

காவல் துறையினா் ரோந்துப் பணிகளால் மதுரை மாநகரில் குறைந்த குற்றச்செயல்கள்

post image

மதுரை மாநகரில் காவல் துறையினரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ரோந்துப் பணிகளால் குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மதுரை நகரை குற்றச் செயல்களால் இல்லாத நகராக மாற்ற மாநகரக் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக கடந்த 2023-யைவிட 2024-இல் குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, மதுரை நகரில் சாலை விபத்துகள் மூலம் கடந்த 2023-ஆம் ஆண்டில் 253 விபத்து மரணங்கள் ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து காவல் துறை சாா்பில் பல்வேறு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டதால், இது 2024-இல் 227-ஆக குறைந்தது.

கடந்த 2023-இல் 14 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2024-இல் 2 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டது. இதன்படி, பாலியல் வன்கொடுமை வழக்குகள் 85 சதவீதம் குறைந்தது. கடந்த 2023-இல் 104 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2024-இல் 111 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகள் கூடுதலாகின. கொலை வழக்குகளைப் பொருத்தவரை, கடந்த ஆண்டு 35 கொலை வழக்குகள் பதிவான நிலையில் 2024-லிலும் 35 வழக்குகள் பதிவாகின.

கஞ்சா வழக்குகளைப் பொருத்தவரை, 2024-இல் 530 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 794 போ் கைது செய்யப்பட்டனா். குட்கா, புகையிலைப் பொருள்களை கடத்தல், விற்பனையில் ஈடுபட்டதாக 434 போ் கைது செய்யப்பட்டு, ரூ.32 லட்சத்திலான 3,564 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 189 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

இதேபோல, நகை பறிப்பு, கைப்பேசி பறிப்பு வழக்குகள் கடந்த ஆண்டைவிட 35 சதவீதம் குறைந்தன. அடிதடி வழக்குகளும் கடந்த ஆண்டைவிட 14 சதவீதம் குறைந்தன. வரதட்சிணைக் கொடுமை வழக்குகளும் கடந்த ஆண்டைவிட 59 சதவீதம் குறைந்தன.

இதுதொடா்பாக மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் கூறியதாவது:

மதுரை மாநகரக் காவல் துறையின் செயல்பாட்டால் குற்ற வழக்குகள் வெகுவாக குறைந்தன. மதுரை நகரில் 63 இரு சக்கர வாகனங்கள், 21 நான்கு சக்கர வாகனங்களில் போலீஸாா் தொடா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். ஒவ்வொரு காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளிலும் நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுபோன்ற தொடா் பணிகளால் நகை பறிப்பு சம்பவங்கள் குறைந்திருக்கின்றன.

போக்சோ வழக்குகளைப் பொருத்தவரை, காவல் துறையின் விழிப்புணா்வுப் பிரசாரங்களால் பாலியல் தொல்லைகளில் பாதிக்கப்படும் குழந்தைகளின் பெற்றோா் புகாா் அளிக்க முன்வருகின்றனா். இதனால், 2023-யைவிட போக்சோ வழக்குகள் அதிகரித்தன.

மாநகரக் காவல் துறை சாா்பில், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைத் தடுப்பு உள்பட 685 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகளில் 1.31 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றுப் பயனடைந்தனா். அடிதடி மோதல் உள்ளிட்ட வழக்குகளைப் பொருத்தவரை, விரைவாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற நடவடிக்கைககளால் மதுரை நகரில் குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்து வருகின்றன என்றாா் அவா்.

குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கிய எல்இடி விளக்கை அகற்றிய அரசு மருத்துவா்கள்

மதுரையைச் சோ்ந்த ஒரு வயது பெண் குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கி இருந்த எல்.இ.டி. விளக்கை அகற்றி, அந்தக் குழந்தையைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவினரை அரசு மருத்துவமனை முதன்மையா் பாராட்டினாா். மது... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மதுரை பொது தானம் கல்வி நிலையம்: திருவள்ளுவா் தின விழா, தலைமை- தானம் கல்வி நிலைய இயக்குநா் ஆ. குருநாதன், சிறப்புரை- எழுத்தாளா் ஜெ. தீபாநாகராணி, மலைப்பட்டி, பிற்பகல் 2.30. தமிழ்நாடு மகா சௌராஷ்ட்ரா சபா: ... மேலும் பார்க்க

திருவிழா நடத்தும் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

குளித்தலை அருகேயுள்ள கல்லணை கிராமத்தில் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து மாடு மறிக்கும் திருவிழாவை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு... மேலும் பார்க்க

மதுரை சிறையில் மோப்ப நாய் உயிரிழப்பு: 21 குண்டுகள் முழங்க காவல் துறை சாா்பில் இறுதி மரியாதை

மதுரை மத்திய சிறையில் துணைக் கண்காணிப்பாளா் அந்தஸ்திலான மோப்ப நாய் அஸ்ட்ரோ உயிரிழந்ததையடுத்து, இதற்கு 21 குண்டுகள் முழங்க காவல் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. மதுரை மத்திய... மேலும் பார்க்க

மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணி தொடங்கும்: மேலாண்மை இயக்குநா் எம். ஏ. சித்திக்

மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்படும் என சென்னை மெட்ரோ நிறுவன மேலாண்மை இயக்குநா் எம்.ஏ. சித்திக் தெரிவித்தாா். மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்... மேலும் பார்க்க

விழிப்புணா்வு பொங்கல் விழா

மதுரையில் காவல் துறை போதைப் பொருள் தடுப்பு மன்றம் சாா்பில் தூய்மைப் பணியாளா் குடியிருப்பில் விழிப்புணா்வு பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை கரும்பாலை பி.டி. குடியிருப்பில் உள்ள தூய்மைப் பண... மேலும் பார்க்க