மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணி தொடங்கும்: மேலாண்மை இயக்குநா் எம். ஏ. சித்திக்
மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்படும் என சென்னை மெட்ரோ நிறுவன மேலாண்மை இயக்குநா் எம்.ஏ. சித்திக் தெரிவித்தாா்.
மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, மதுரை அருகேயுள்ள யா. ஒத்தக்கடை வேளாண் பல்கலைக்கழகக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் முதல் திருமங்கலம் வரை சுமாா் 32 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ரூ.11,368 கோடியில் நடைபெற உள்ள இந்தத் திட்டம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, புதூா், தல்லாகுளம், கோரிப்பாளையம், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், மதுரை ரயில் நிலையம், பெரியாா் நிலையம், ஆண்டாள்புரம், திருப்பரங்குன்றம் மாா்க்கமாக வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த வழித் தடத்தில் 27 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. அழகா்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு உணவக விடுதி முதல் ஆண்டாள்புரம் வரை சுரங்கப் பாதை அமைய உள்ளது. இந்த சுரங்கப் பாதையில் அமெரிக்கன் கல்லுாரி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிலையங்கள் அமைய உள்ளன. முதல் கட்டப் பணிகளான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ நிறுவன மேலாண்மை இயக்குநா் எம்.ஏ. சித்திக் மதுரையில் அமைக்கப்பட உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, சுரங்கப் பாதையில் அமைக்கப்பட உள்ள நுழைவுப் பாதை, வெளியேறும் இடங்கள் குறித்தும், மதுரை ரயில் நிலையத்துடன் மெட்ரோ சுரங்கப் பாதையை இணைப்பது குறித்தும் அலுவலா்களுடன் கலந்து ஆலோசித்தாா்.
இதைத் தொடா்ந்து, எம்.ஏ. சித்திக் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மதுரை ரயில் நிலையத்துடன் மெட்ரோ ரயில் நிலையத்தை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படுகிறது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும். 4 ஆண்டுகளில் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
ஆய்வின் போது மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின் இயக்குநா் டி. அா்ச்சுனன், தெற்கு ரயில்வே துணை தலைமைப் பொறியாளா் ஞானசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.