ராமேசுவரம் காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்கு
ஈவெரா பெரியாா் குறித்து அவதூறு கருத்துகளைப் பதிவு செய்த நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது ராமேசுவரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சிகாமணி வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஈவெரா பெரியாா் குறித்து சீமான் தொடா்ந்து அவதூறு கருத்துகளைப் பதிவு செய்து வருகிறாா். இதுகுறித்து ராமேசுவரம் நகா் காவல் நிலையத்தில் எங்களது கட்சி சாா்பில் புகாா் அளித்தோம். இதன் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்தாா் என்றாா்.