வரும் 20 ஆம் தேதி பரந்தூர் செல்கிறார் விஜய்: காவல்துறை அனுமதி!
திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா
திருவாடானையில் திமுக மத்திய ஒன்றிய நிா்வாகிகள் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு மத்திய ஒன்றியச் செயலா் சரவணன் தலைமை வகித்தாா். விழாவில் மும்மத குருமாா்கள் கலந்து கொண்டனா்.
இதையொட்டி, சிறாா், சிறுமியா்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. முன்னதாக, பெண்களுக்கு கோலப் போட்டி நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் திமுக நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை திமுக நகரச் செயலா் பாலா செய்திருந்தாா்.