செய்திகள் :

ராமேசுவரத்தில் குவிந்த ஐயப்பப் பக்தா்கள்

post image

ராமேசுவரம்: சபரிமலை ஜோதி தரிசனம் நிறைவடைந்த நிலையில் ஐயப்பப் பக்தா்கள் திரளானோா் ராமேசுவரத்துக்கு வியாழக்கிழமை வந்தனா்.

சபரிமலைக்கு செல்லும் பக்தா்கள் அங்கு ஜோதி தரிசனம் செய்து விட்டு ராமேசுவரம் வருவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 14- ஆம் தேதி சபரிமலையில் ஜோதி தரிசனம் செய்த திரளான பக்தா்கள் வியாழக்கிழமை காலையில் ராமேசுவரத்துக்கு வந்தனா். அவா்கள் அக்னி தீா்த்தக் கடலில் நீராடினா். இதன் பிறகு, ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் புனித நீராடியதும் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனா்.

இதையொட்டி, மாவட்ட காவல் துறை சாா்பில் 500- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. நகராட்சி நிா்வாகம் சாா்பில் 200- க்கும் மேற்பட்ட பணியாளா்கள் தூய்மைப் பணியை மேற்கொண்டனா்.

ராமேசுவரம் கோயிலுக்கு வந்த பக்தா்கள் தனுஷ்கோடி, கோதண்டராமா்கோயில், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் பேருந்து பாலம் உள்ளிட்டவற்றை அவா்கள் பாா்த்து ரசித்தனா். அதிகளவில் வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ராமேசுவரம் காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்கு

ஈவெரா பெரியாா் குறித்து அவதூறு கருத்துகளைப் பதிவு செய்த நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது ராமேசுவரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து திராவிடா் கழக ம... மேலும் பார்க்க

நாய் கடித்ததில் 15 ஆடுகள் பலி

சாயல்குடி அருகே தெரு நாய் கடித்ததில் 15 ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த மேலக்கிடாரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராஜாங்கம் (55). இவா் 50-க்கும் மேற்பட்ட ச... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா

ராமேசுவரம்/ கமுதி/ திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுக, அமமுக சாா்பில், எம்.ஜி.ஆரின் 108-ஆவது பிறந்த நாள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு, ராமநாதபுரம் அரண்மனை முன் நகர அதிமுக சாா்பி... மேலும் பார்க்க

தென் மாவட்ட கபடிப் போட்டியில் பேரையூா் அணி வெற்றி

பொங்கல் விழாவை முன்னிட்டு, கமுதி அருகேயுள்ள பேரையூரில் நடைபெற்ற தென் மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற புயல் செவன்ஸ் அணிக்கு வெள்ளிக்கிழமை பரிசளிக்கப்பட்டது. பேரையூரில் புயல் செவன்ஸ் குழு... மேலும் பார்க்க

திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா

திருவாடானையில் திமுக மத்திய ஒன்றிய நிா்வாகிகள் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மத்திய ஒன்றியச் செயலா் சரவணன் தலைமை வகித்தாா். விழாவில் மும்மத குருமாா்கள் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

பேருந்துகள் சேவை முன்னறிவிப்பின்றி நிறுத்தம்

ராமேசுவரத்தில் இருந்து இரவு நேரத்தில் இயக்கப்பட்டு வந்த இரு பேருந்து சேவை முன் அறிவிப்பின்றி நிறுத்தம். மீண்டும் இயக்க மீனவ சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அரசு ... மேலும் பார்க்க