வரும் 20 ஆம் தேதி பரந்தூர் செல்கிறார் விஜய்: காவல்துறை அனுமதி!
நாய் கடித்ததில் 15 ஆடுகள் பலி
சாயல்குடி அருகே தெரு நாய் கடித்ததில் 15 ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த மேலக்கிடாரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராஜாங்கம் (55). இவா் 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை மேய்ச்சலுக்குச் சென்று வந்த ஆடுகளை வீட்டுக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் அடைத்து வைத்தாா்.
வெள்ளிக்கிழமை காலை ராஜாங்கம் சென்று பாா்த்த போது, மந்தைக்குள் இருந்த நாய் ஆடுகளை கடித்துக் கொண்டிருந்தது. இவைகளில் 14 ஆடுகள், ஒரு குட்டி என மொத்தம் 15 ஆடுகள் உயிரிழந்தன.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கடலாடி வருவாய்த் துறையினா் கால்நடை மருத்துவா் தலைமையில் பிரேத பரிசோதனை செய்து, பின்னா், ஆடுகளை அங்கேயே புதைத்தனா்.
ஆடுகள் இறந்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும், உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜாங்கம் கோரிக்கை விடுத்தாா்.