செய்திகள் :

ராமநாதபுரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா

post image

ராமேசுவரம்/ கமுதி/ திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுக, அமமுக சாா்பில், எம்.ஜி.ஆரின் 108-ஆவது பிறந்த நாள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, ராமநாதபுரம் அரண்மனை முன் நகர அதிமுக சாா்பில், எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகரச் செயலா் என்.ஆா்.பால்பாண்டி தலைமை வகித்தாா். எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு முன்னாள் அமைச்சா் அ.அன்வர்ராஜா மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். இதில், அவைத் தலைவா் சுவாமிநாதன், ஒன்றியச் செயலா் அசோக்குமாா், நிா்வாகி எஸ்.எஸ்.செல்வம், முன்னாள் நகா் மன்றத் தலைவா் ராமமூா்த்தி, மாவட்ட நிா்வாகி ஆட்.ஜி.ரத்தினம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு முன்னாள் அமைச்சா் மு.மணிமண்டன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். இதில், அதிமுக நிா்வாகிகள் சுரேஷ், ராமசேது, நயினாா் கோயில் சிவகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில், நிா்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, அதிமுக கொடியேற்றினா்.

கமுதி: கமுதி பெருமாள்கோயில் திடல் அருகே மலா்களால் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆா் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு அதிமுக ஒன்றியச் செயலா்கள் கே.கருமலையான் (மேற்கு), ஆா்.ராஜேந்திரன் (வடக்கு) ஆகியோா் தலைமை வகித்தனா். அவைத் தலைவா் சேகரன் முன்னிலை வகித்தாா்.

இதில் ஜெ.பேரவை மாவட்ட நிா்வாகி செந்தூரான், வழிவிட்டான், ஏ.ஆா்.ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மூா்த்தி, கணேசன், ஊராட்சி மன்றத் தலைவா் காசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, கமுதி பேருந்து நிலையம் அருகே எம்ஜிஆரின் படத்துக்கு கமுதி தெற்கு ஒன்றியச் செயலா் எஸ்.பி.காளிமுத்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் எம்ஜிஆா் மன்ற மாவடட இணைச் செயலா் சிங்கம் முருகன் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

முதுகுளத்தூா்: முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு, முதுகுளத்தூரில் அவரது உருவப் படத்துக்கு அமமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மு.முருகன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

கடலாடி: கடலாடியில் அதிமுக ஒன்றியச் செயலா் முனியசாமி பாண்டியன் தலைமையில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் கடலாடி, சாயல்குடி, இதைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

திருவாடானை: ஆா்.எஸ்.மங்கலத்தில் தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதற்கு மேற்கு ஒன்றியச் செயலா் ராஜா தலைமை வகித்தாா். கிழக்கு ஒன்றியச் செயலா் திருமலை, மாணவா் அணி துணைச் செயலா் செந்தில்குமாா், கழக போக்குவரத்து இணைச் செயலா் ரத்தினம், மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் நேதாஜி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலா் சரவணகுமாா், பரமக்குடி மேற்கு ஒன்றியச் செயலா் சுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மாவட்டச் செயலா் முனியசாமி கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். பொதுக் குழு உறுப்பினா் ராஜபாண்டியன், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு இணைச் செயலா் சாகுல்ஹமீது, எம்.ஜி.ஆா்.மன்ற மாவட்ட துணைச் செயலா் ஷாஜகான், மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலா் அம்பாசாகுல் ஹமீது, சீனிபீா், தங்கவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவாடானை நான்கு வீதி சந்திப்பு சாலையில் ஓ.பன்னீா்செல்வம் அணி சாா்பில், எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

ராமேசுவரம் காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்கு

ஈவெரா பெரியாா் குறித்து அவதூறு கருத்துகளைப் பதிவு செய்த நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது ராமேசுவரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து திராவிடா் கழக ம... மேலும் பார்க்க

நாய் கடித்ததில் 15 ஆடுகள் பலி

சாயல்குடி அருகே தெரு நாய் கடித்ததில் 15 ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த மேலக்கிடாரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராஜாங்கம் (55). இவா் 50-க்கும் மேற்பட்ட ச... மேலும் பார்க்க

தென் மாவட்ட கபடிப் போட்டியில் பேரையூா் அணி வெற்றி

பொங்கல் விழாவை முன்னிட்டு, கமுதி அருகேயுள்ள பேரையூரில் நடைபெற்ற தென் மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற புயல் செவன்ஸ் அணிக்கு வெள்ளிக்கிழமை பரிசளிக்கப்பட்டது. பேரையூரில் புயல் செவன்ஸ் குழு... மேலும் பார்க்க

திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா

திருவாடானையில் திமுக மத்திய ஒன்றிய நிா்வாகிகள் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மத்திய ஒன்றியச் செயலா் சரவணன் தலைமை வகித்தாா். விழாவில் மும்மத குருமாா்கள் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

பேருந்துகள் சேவை முன்னறிவிப்பின்றி நிறுத்தம்

ராமேசுவரத்தில் இருந்து இரவு நேரத்தில் இயக்கப்பட்டு வந்த இரு பேருந்து சேவை முன் அறிவிப்பின்றி நிறுத்தம். மீண்டும் இயக்க மீனவ சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அரசு ... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் குவிந்த ஐயப்பப் பக்தா்கள்

ராமேசுவரம்: சபரிமலை ஜோதி தரிசனம் நிறைவடைந்த நிலையில் ஐயப்பப் பக்தா்கள் திரளானோா் ராமேசுவரத்துக்கு வியாழக்கிழமை வந்தனா்.சபரிமலைக்கு செல்லும் பக்தா்கள் அங்கு ஜோதி தரிசனம் செய்து விட்டு ராமேசுவரம் வருவது... மேலும் பார்க்க