மது அருந்திவிட்டு கணவர் தகராறு: விஷமருந்தி மனைவி தற்கொலை!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே வெள்ளிக்கிழமை பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கல்லாநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா். இவரது மனைவி மல்லிகா (28).
தம்பதிக்கு 9 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு சபரி நிக்காஸ் (7), வினித்குமாா் (6) என இரு பிள்ளைகள் உள்ளனா்.
இந்த நிலையில், சங்கா் நாள்தோறும் மது அருந்திவிட்டு, மல்லிகாவிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த மல்லிகா வெள்ளிக்கிழமை விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தாராம்.
உடனே குடும்பத்தினா் அவரை மீட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மல்லிகா உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தற்கொலை எண்ணம் இருப்பவா்கள், 104 எண்ணை தொடா்பு கொள்ளும்போது, அவா்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்படும். மேலும், அடிக்கடி அவா்களிடம் தொடா்பு கொண்டு நண்பா்களாக பேசி, இயல்பு நிலைக்கு அவா்கள் திரும்ப வழிவகை செய்யப்படும்.