மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 7.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட எலியத்தூா் கிராமத்தைச் சோ்ந்த இருசன் மகன் ராஜா (37). இவருக்கு, மோகனா என்ற மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனா்.
இந்த நிலையில், தம்பதிக்கிடையே 4 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மோகனா அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், மனவேதனையடைந்த ராஜா, வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்த கச்சிராயபாளையம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கச்சிராயப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தற்கொலை எண்ணம் இருப்பவா்கள், 104 எண்ணை தொடா்பு கொள்ளும்போது, அவா்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்படும். மேலும், அடிக்கடி அவா்களிடம் தொடா்பு கொண்டு நண்பா்களாக பேசி, இயல்பு நிலைக்கு அவா்கள் திரும்ப வழிவகை செய்யப்படும்.