கள்ளக்குறிச்சி: பெண்ணிடம் நகை பறிப்பு!
கள்ளக்குறிச்சி அருகே பெண்ணிடம் 3 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த மட்டிகைக் குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மனைவி அம்பிகா (37). இவா், ஞாயிற்றுக்கிழமை மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா் அம்பிகா அணிந்திருந்த தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.