நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!
கும்பமேளா விபத்து: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட விபத்து குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகின்றது. மௌனி அமாவாசையான புதன்கிழமை திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராட குவிந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்டநெரிசலில் சிக்கி 30 பேர் பலியானதாகவும் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : மகா கும்பமேளா: மௌனி அமாவாசை நாளில் 5.7 கோடி பேர் புனித நீராடல்!
இந்த நிலையில், கும்பமேளா போன்ற மக்கள் கூடும் இடங்களில் கூட்டநெரிசல்களை தடுப்பதற்கான மாநில அரசின் கொள்கை, வழிகாட்டு நெறிமுறைகளை கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், முக்கிய பிரமுகர்களின் வருகை பக்தர்களின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்றும் கும்பமேளாவில் பக்தர்கள் உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் அதிக இடம் ஏற்படுத்த உத்தரவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனவரி 29 விபத்து குறித்து உபி அரசு அறிக்கை சமர்ப்பிக்கவும், அலட்சியமாக நடந்துகொண்ட அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.