சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் விலகல்!
மத்தியப் பிரதேசத்தில் மிராஜ் 2000 பயிற்சி விமானம் விபத்து!
மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியது.
மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள பஹ்ரேதா சனி கிராமம் அருகே இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மேலும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆர்.என். ரவி சுயமாக முடிவெடுத்துள்ளார்! - உச்சநீதிமன்றம் கண்டிப்பு
இந்த விபத்தைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைவாக அனுப்பப்பட்டுள்ளனர்.
விமான விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை என்றாலும், சம்பவ இடத்திலிருந்து வந்த காணொளிகளில், ஒரு வயலில் சிதறிக் கிடந்த விமான பாகங்கள் தீயில் எறிவதையும் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த விமானத்தைச் சுற்றி கூடியிருந்ததையும் காட்டியது.
விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணங்கள் கண்டறியப்பட்டவுடன் கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.