Amit shah-க்கு நெருக்கடி தரும் STALIN-ன் All India Move... டெல்லி ஸ்கெட்ச்! | El...
ரூபாய் மதிப்பு கடும் சரிவு! ரூ. 87.58
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இன்றைய வணிக நேர முடிவில் 15 காசுகள் சரிந்து ரூ. 87.58 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2025 தொடங்கியது முதல் மிக மோசமான சரிவைச் சந்தித்த ஆசிய நாடுகளின் நாணய மதிப்புகளில் இந்திய ரூபாய் மதிப்பு முதன்மையாக உள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும் விதித்த வரி ஏற்றம், வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவை ரூபாய் மதிப்பு சரிவதற்கான முதன்மை காரணங்களாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்திய பங்குச் சந்தை இன்று சரிவுடன் தொடங்கியது. இதன் எதிரொலி நாணய மதிப்பிலும் நீடித்தது.
நேற்றைய வணிகத்தில் வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணியில் ரூபாய் மதிப்பு 39 காசுகள் சரிந்து ரூ.87.46 ஆக முடிந்தது. இன்றைய வணிக நேர முடிவில் மேலும் 15 காசுகள் சரிந்து இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 87.58 காசுகளாக நிறைவு பெற்றது.
பங்குச் சந்தை நிலவரம்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 213.12 புள்ளிகள் சரிந்து 78,058.16 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.27 சதவீதம் சரிவாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 92.95 புள்ளிகள் சரிந்து 23,603.35 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில்0.39 சதவீதம் சரிவாகும்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?