இந்திய புத்தாக்க நிறுவனத் தலைவர்களுடன் ஓபன்ஏஐ நிறுவனம் ஆலோசனை!
திரிவேணி இன்ஜினியரிங் நிறுவனத்தின் நிகர லாபம் 69% சரிவு!
புதுதில்லி: சர்க்கரை தாயரிப்பு நிறுவனமான, திரிவேணி இன்ஜினியரிங் அண்டு இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், டிசம்பர் காலாண்டு (3வது காலாண்டு) 69 சதவிகிதம் சரிவடைந்து ரூ.42.57 கோடி ஆக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.137.40 கோடியாக இருந்தது. 2025-26 நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலாண்டில் அதன் மொத்த வருமானம் ரூ.1,553.64 கோடியிலிருந்து 3 சதவிகிதம் அதிகரித்து ரூ.1,600 கோடியாக இருந்தது என்று தனது ஒழுங்குமுறை தாக்கல் அறிக்கையில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செலவினம் ரூ.1,393.30 கோடியிலிருந்து 12.44 சதவிகிதம் வரை அதிகரித்து ரூ.1,566.76 கோடியானது.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக துருவ் எம் சாவ்னியை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் நியமிக்க இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதே வேளையில் மின் பரிமாற்ற வணிகத்தின் திறனை மேம்படுத்துவதற்காக திரிவேணி இன்ஜினியரிங் ரூ.60 கோடி மூலதன செலவுக்கு (capex) ஒப்புதல் அளித்துள்ளது.
இதையும் படிக்க: வெல்ஸ்பன் கார்ப் நிறுவனத்தின் லாபம் இரு மடங்காக அதிகரிப்பு!