செய்திகள் :

தை பூசம், வார இறுதி நாள்களையொட்டி சிறப்புப் பேருந்துகள்!

post image

வளர்பிறை முகூர்த்தம், தை பூசம் மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிப். 7 (வெள்ளிக்கிழமை) பிப். 8 (சனிக்கிழமை) மற்றும் பிப். 9 (ஞாயிறுக் கிழமை) வார விடுமுறை நாள்கள். முகூர்த்தம் மற்றும் தை பூசம் முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு பிப். 7 (வெள்ளிக்கிழமை) அன்று 380 பேருந்துகள் இயக்கப்படும்.

பிப். 8 (சனிக்கிழமை) 530 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு பிப். 7 வெள்ளிக் கிழமை அன்று 60 பேருந்துகளும் பிப். 8 சனிக்கிழமை அன்று 60 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதாவரத்திலிருந்து பிப். 7 அன்று 20 பேருந்துகளும் பிப். 8 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 11,336 பயணிகளும் சனிக்கிழமை 634 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8,864 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - நடந்தது என்ன? ஆட்சியர் விளக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்ச... மேலும் பார்க்க

சாத்தூர்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் சின்னவாடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று(பிப். 5) நிகழ்ந்த வெடிவிபத்தில் ஒருவர் பலியானார். பிற்பகலில் உணவு இடைவேளைக்குப் பிறகு, ஓா் அறை பலத்த சப்தத்துடன் வெடித்துச் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை! -இபிஎஸ்

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை:சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: ‘கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூவரால் பாலியல... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

மதுரை திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைதி பேணுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கமளித்துள்ளார்.திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து மதுரை ஆட்சியர் சங்கீதா அறிக்கை ஒன்... மேலும் பார்க்க

கோவை: திருமணம் மீறிய உறவால் ஒருவர் கொலை!

கோவையில் மனைவியுடன் இருந்த கள்ளக் காதலனை வெட்டி படுகொலை செய்த கணவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பிரபாகரன் ( 45). இவரது மனைவி மதுரையை சேர்ந்த வாணிப்பிரியா (42). இவர்களுக்கு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக அமைச்சர்களுக்கு அண்ணாமலை கண்டனம்?

திருப்பரங்குன்ற விவகாரத்தில் பாஜகவினரை குற்றம் சாட்டிய அமைச்சர்களின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழகத்தில் பாஜக கலவரத்தை ஏற்படுத்த... மேலும் பார்க்க