ஆற்காடு கோயிலில் ரத சப்தமி
ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் ரத சப்தமி விழா நடைபெற்றது.
விழாவையொட்டி பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாரானையும், உற்சவா் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. விழாவில் திருபணிக் குழு தலைவா் பொன்.கு.சரவணன், உபயாதார்ரகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.