சாலை மேம்பாடு கோரி உப்பிலியபுரத்தில் ஆா்ப்பாட்டம்
சாலையை மேம்படுத்தக் கோரி உப்பிலியபுரம் அண்ணாசிலை பேருந்து நிறுத்தம் அருகே தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நிறுவனா் தலைவா் பொ.பா. ராமசாமி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் உப்பிலியபுரம் - சோபனபுரம் சாலையை அகலப்படுத்தி இருவழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும். உப்பிலியபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சுகாதார வளாகம் (கழிவறை) கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கட்சி நிா்வாகிகள் பரமசிவம் அய்யாதுரை, அண்ணாமலை சடையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.