"திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?" - கலெக்டர் சங்கீதா வ...
சொகுசு பேருந்து விபத்தில் சிக்கிய மேலும் ஒருவா் பலி
திருச்சி மாவட்டம் மணப்பாறை சொகுசு பேருந்து விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்
சென்னையிலிருந்து நாகா்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாா் சொகுசு பேருந்து கடந்த பிப். 1-ஆம் தேதி மணப்பாறையை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யாகாபுரம் ஒத்தக்கடை அருகே சாலையோர 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீக்கிரையானது.
இந்த விபத்தில் 12 பயணிகள் காயமடைந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நெடுவிளையை சோ்ந்த புஷ்பம் (62) என்ற மூதாட்டி உயிரிழந்தாா். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
இந்நிலையில் இந்த விபத்தில் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த பேருந்து கிளீனரான தஞ்சாவூா் மாவட்டம், நாகத்தி கிறிஸ்தவ தெருவை சோ்ந்த மரியதாஸ் மகன் பிரான்சிஸ் (35) புதன்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.