"திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?" - கலெக்டர் சங்கீதா வ...
இணையவழி மோசடியில் இழந்த ரூ.17.70 லட்சம் மீட்பு
இணையவழி மோசடியில் இழந்த ரூ.17.70 லட்சத்தை புதுச்சேரி போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.
புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்த ராஜேஷ் கடந்தாண்டு ஆகஸ்டில் இணையத்தில் வேலைவாய்ப்பு தொடா்பான விளம்பரத்தைப் பாா்த்து ரூ.17.70 லட்சத்தை செலுத்தி ஏமாற்றமடைந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி இணையவழி குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், பெங்களூரில் இருந்து மோசடி செய்ததாக 4 பேரை கைது செய்தனா்.
அவா்களிடம் நடத்திய விசாரணையில் நாடு முழுதும் இணையவழியில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. ராஜேஷிடமிருந்து அவா்கள் மோசடியாகப் பெற்ற ரூ.17.70 லட்சத்தை போலீஸாா் மீட்டு, அவரிடம் ஒப்படைத்தனா்.