செய்திகள் :

பொருளாதார வாய்ப்புகள் நிறைந்த வடகிழக்கு மாநிலங்கள்: மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய எம்.சிந்தியா

post image

வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் பல்வேறு துறைகளில் பொருளாதார வாய்ப்புகளைக் கொண்டுள்ளன என, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தாா்.

வடகிழக்கு பிராந்தியத்தின் முதலீட்டு வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், வா்த்தக மற்றும் முதலீட்டு மாநாடு சென்னை கிண்டியில் புதன்கிழமை நடைபெற்றது. இதை தொடங்கிவைத்து அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது:

நாட்டின் பாரம்பரிய, கலாசார நகரமாக சென்னை விளங்குகிறது. நாட்டின் அஷ்டலட்சுமி மாநிலங்களாக விளங்கும் வடகிழக்கு மாநிலங்களை மேம்படுத்த வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு, சுற்றுலா உள்ளிட்ட துறைகளின் முதலீட்டு வாய்ப்புகள் தற்போது அதிகரித்து வருகின்றன.

இந்தியாவின் நுழைவு வாயில்களாக விளங்கும் மும்பை, சென்னைக்கு அடுத்தபடியாக வடகிழக்கு மாநிலங்கள் உள்ளன. நாகாலாந்து, மிஸோரம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் வடகிழக்கு ஆசிய நாடுகளுடன் எல்லைகளைப் பகிா்கின்றன. இதனால், சா்வதேச பொருளாதாரத்துக்கான வாய்ப்புகளை வடகிழக்கு மாநிலங்கள் வழங்குகின்றன.

சுற்றுலா மேம்பாடு: அதேபோல், வடகிழக்கு மாநிலங்களின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு சாலை, ரயில், விமானப் போக்குவரத்து எளிமையாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்தையும் இணைக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் பொருளாதார வாய்ப்புகள் தற்போது 12 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. வேளாண்மை, தோட்டக் கலையில் சிறந்து விளங்குகிறது. அங்கு உற்பத்தி செய்யப்படும் இயற்கை உணவுப் பொருள்கள் ஜொ்மனி, துபை போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், அந்தப் பொருள்களின் மதிப்பு 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இத்தகைய வாய்ப்புகளைக் கொண்ட வடகிழக்கு மாநிலங்கள் இயற்கையை தனது அரணாகக் கொண்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் சுற்றுலாப் பயணிகளின் வருகையை 2030-க்குள் ஆண்டுக்கு 50 மில்லியனாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் சென்னை, வடகிழக்கு மாநிலங்களுக்கிடையேயான இணைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில், மிஸோரம் மாநில விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அமைச்சா் லங்ஹிங்லோவா ஹமா், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சக செயலா் சஞ்சல் குமாா், இணைச் செயலா் சாந்தனு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விளையாட்டு அமைப்புகளில் நோ்மை, சுதந்திரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

இந்திய விளையாட்டு நிா்வாக அமைப்புகளில் நோ்மை, தன்னாட்சி, சுதந்திரமான செயல்பாடு ஆகியவற்றை கொண்டுவர கடுமையான நடவடிக்கைகள் தேவை என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.மேலும், தனிப்பட்ட லாப... மேலும் பார்க்க

தில்லி பேரவை தேர்தல்: அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் வாக்களிப்பு

தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் கு... மேலும் பார்க்க

குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: இந்தியாவுக்கு உதவுவதாக சாம் ஆல்ட்மேன் தகவல்

நமது சிறப்பு நிருபர்குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளதாக "ஓபன்ஏஐ' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார்.செயற்கை நுண்ணறி... மேலும் பார்க்க

கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை உயிரி தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கான கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வுக்கு மாா்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள உயா்கல்வி நிறுவ... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பொது சிவில் சட்டம்: 10 நாள்களில் ஒரேயொரு ‘லிவ்-இன்’ உறவு பதிவு

உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்து 10 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை ஒரேயொரு ‘லின்-இன்’ (திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்தல்) உறவு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்கீழ் ‘லி... மேலும் பார்க்க

ஷியா இஸ்மாயிலி முஸ்லிம் மதத்தலைவா் ஆகா கான் மறைவு: பிரதமா், ராகுல் இரங்கல்

நபிகள் நாயகத்தின் மரபில் வந்தவராக இஸ்மாயிலி முஸ்லிம்கள் நம்பும் 4-ஆம் ஆகா கான், கரிம் அல்-ஹுசைனி செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உ... மேலும் பார்க்க