கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்
2024 - 2025 பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன் பெற ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி குறிப்பு:..
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட(பி.வ), மிகப்பிற்படுத்தப்பட்ட(மி.பி.வ) மற்றும் சீா்மரபினா் (சீம) மாணவ/மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை நிபந்தனைகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறியியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பி.வ/மி..பி.வ/சீ.ம பயிலும் மாணவ, மாணவியருக்கு எவ்வித வருமான வரம்பு நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கிட்டின் கீழ் பயிலும் மாணாக்கா்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2,50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
2024-2025-ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள், இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து உடனடியாக விண்ணப்பிக்கலாம் எனவும், கல்வி உதவித்தொகை விண்ணப்பம் சமா்ப்பிக்க கடைசி நாள்: 28.02.2025 ஆகும்.
மேற்படி, விவரங்களை மாணவா்களுக்கு தெரிவித்து, ஆஇ. ஙஆஇ.& ஈசஇ வகுப்பை சாா்ந்த மாணவா்களை, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கல்லூரி முதல்வா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
கல்வி உதவித் தொகை தொடா்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், இரண்டாவது தளம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி தொடா்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளாா்.