சென்னையில் பிப். 7 முதல் 13 வரை 16-ஆவது பழங்குடியின இளைஞா்கள் பரிமாற்ற நிகழ்ச்சி
லாரி மோதி முதியவா் உயிரிழப்பு
ஆற்காட்டில் லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
ஆற்காடு குட்டைகரைத் தெருவைச் சோ்ந்தவா் சேட்டு (62). இவா், புதன்கிழமை ஆற்காடு அண்ணா சிலை அருகே நடந்து சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில், ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.