மண்ணச்சநல்லூா் அரசு மாதிரி மகளிா் பள்ளியில் முப்பெரும் விழா
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி ஆண்டு விழா, இலக்கிய மன்ற நிறைவு விழா, உடற்றிடப் போட்டி பரிசளிப்பு விழா என நடைபெற்ற முப்பெரும் விழாவுக்கு மாவட்டக் கல்வி அலுவலா் (லால்குடி) முருகேசன் தலைமை வகித்தாா். நிகழ்வில் மண்ணச்சநல்லூா் சிதம்பரம் பிள்ளை மகளிா் கல்லூரி தமிழ்த் துறை தலைவா் செ. அகிலாண்டேஸ்வரி சிறப்புரையாற்றினாா். விழாவில் அரசு பொதுத் தோ்வு, இலக்கிய மன்ற விழா போட்டிகள், விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.
மேலும் மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியா் க. முத்துச்செல்வன், மண்ணச்சநல்லூா் பேரூராட்சித் தலைவா் சிவசண்முககுமாா், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஏ.சேக் அப்துல்லா மற்றும் மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், பெற்றோா், மாணவிகள் கலந்து கொண்டனா்.