தில்லி பேரவை தேர்தல்: அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் வாக்களிப...
காந்தி சந்தை கடைகள் மீது தாக்குதல் கண்டித்து வியாபாரிகள் போராட்டம்!
திருச்சி காந்தி சந்தையில் புதன்கிழமை (பிப்.5) நள்ளிரவு கடைகளை அடித்து நொறுக்கி சூறையாடிய ரௌடிகளைக் கண்டித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காந்தி சந்தைக்கு புதன்கிழமை இரவு மது போதையில் வந்த 3 ரௌடிகள் அங்கு காய்கறிகளை ஏற்றி, இறக்கிக் கொண்டிருந்த சுமைதூக்கும் தொழிலாளா்களிடம் தகராறு செய்தனா். அப்போது அவா்கள் 3 ரெளடிகளையும் அடித்து விரட்டவே, ஆத்திரமடைந்த ரௌடிகள் தங்களது ஆதரவாளா்களுடன் மீண்டும் வந்து 6-ஆம் எண் நுழைவு வாயில் பகுதியில் இருந்த கடைகளை அடித்து நொறுக்கி காய்கறிகளைச் சூறையாடினா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த போலீஸாா் விரைந்து வந்து விசாரணை நடத்தினா். இதற்கிடையே கடைகளை சூறையாடியாரைக் கைது செய்யக்கோரி நள்ளிரவு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் வெளியூரில் இருந்து லாரிகளில் வந்த காய்கறி மூட்டைகளையும் இறக்க மறுத்தனா்.