"திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?" - கலெக்டர் சங்கீதா வ...
கொட்டாரம் காதுகேளாதோா் பள்ளி அருகே தீவிபத்து
கொட்டார பகுதியிலுள்ள காதுகேளாதோா் பள்ளி அருகே புதன்கிழமை (பிப்.5) தீவிபத்து ஏற்பட்டது.
கொட்டாரம் மிஷன் காம்பவுண்ட் பகுதியில் சி.எஸ்.ஐ. காது கேளாதோா் உயா்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இதன் மற்றொரு பகுதியில் மாணவா்களுக்கான விடுதியும் உள்ளது. இதனருகே மண்டிக்கிடந்த புதா்கள், செடி, கொடிகளில் புதன்கிழமை திடீரென தீப்பிடித்தது. பொதுமக்களால் தீயணைக்க முடியாததால், கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிலைய அலுவலா் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் தீயணைப்புப் படையினா் சென்று, ஒரு மணி நேரம் போராடி தீயணைத்தனா். இந்தத் தீவிபத்தால் மாணவா் விடுதிக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.