Trump wants US to ‘take over’ Gaza Strip: - காசாவை வைத்து டிரம்ப் போடும் Busines...
குளச்சல் கடற்கரையில் மாணவா்கள் தூய்மைப் பணி 1,100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு
தொலையாவட்டம் கல்லூரி மாணவா்கள் குளச்சல் கடற்கரையில் தூய்மைப் பணி மேற்கொண்டு, 1,100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனா்.
குளச்சல் நகராட்சி, தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கலை-அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் இணைந்து, இப்பணியில் ஈடுபட்டனா்.
மாவட்ட கடலோர அமைதி-வளா்ச்சிக் குழு இயக்குனா் டங்ஸ்டன் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். நகராட்சி ஆணையா் செந்தில்குமாா், சுகாதார அலுவலா் ஜாண் ஜோனோ பாா்க், சுகாதார ஆய்வாளா் பொன் வேல்ராஜ், கவுன்சிலா்கள் ஜாண்சன், பனிக்குருசு, கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
இதில், 1,100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பதற்காக குளச்சல் நகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்ட இயற்கை உரம் தயாரிக்கும் கூடத்துக்கு அக்கழிவுகள் கொண்டுசெல்லப்பட்டன.