அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஆர்ஜென்டீனாவும் விலகல்!
பைக் விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழப்பு!
புதுக்கடை அருகே உள்ள பரவை பகுதியில் பைக்குகள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
மிடாலம் பகுதியைச் சோ்ந்த சகாயதாஸ் மகன் ஆன்றோ(16). இவா், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாா். இவா் பைக்கில் மிடாலத்திலிருந்து தேங்காய்ப்பட்டினம் நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண் டிருந்தாராம்.
பரவை பகுதியில் சென்றபோது எதிரே வந்த பைக் ஆன்றோ மீது மோதியதாம்.
தலையில் பலத்த காயமடைந்த ஆன்றோவை அப்பகுதியினா் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.