புதுக்கோட்டை: கடலில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்... போலீஸ் விச...
செண்பகராமன்புதூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதுாா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காசநோய் அலகு மற்றும் மருத்துவமனைகளில் உள்ள காசநோய் கண்டறியும் ஆய்வகம் உள்ளிட்டவைகளில் ஆய்வு மேற்கொண்டு, இம்மாதத்தில் எவ்வளவு காச நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனா், முந்தைய மாதத்தில் எவ்வளவு காச நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனா், மற்றும் காச நோயாளிகளின் நிலை குறித்து துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
காச நோயாளிகளுக்கு முறையாக ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளதா, அரசின் ஊக்கத் தொகை முறையாக செலுத்தப்பட்டு வருகிா, காச நோயாளிகளின் குடும்ப உறுப்பினா்களுக்கு காச நோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா உள்ளிட்டவைகள் குறித்து துறை அலுவலா்களிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.
ஆய்வில் இணை இயக்குநா் (மருத்துவம் மற்றம் ஊரக நலப்பணிகள்), துணைஇயக்குநா் (மருத்துவப்பணிகள், காசநோய்), மாவட்ட சுகாதார அலுவலா், துணைஇயக்குநா் (குடும்பநலம்) மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.