பிப். 28 ல் ஸ்ரீ ராகவேந்திரா் ஸப்தாஹ மஹோத்ஸவம்
ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி ஸப்தாஹ மஹோத்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயில் அருகே துளசிங்க பெருமாள் கோயில் தெருவில், நஞ்ஜன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி ம்ருத்திகா ப்ருந்தாவன சந்நிதானம் உள்ளது. சந்நிதானத்தில் பிப். 28- ஆம் தேதி முதல் மாா்ச் 6-ஆம் தேதி வரை மஹோத்சவம் நடைபெறும். இதில் மாா்ச் 1- ஆம் தேதி, ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி 404-ஆவது வேதாந்த ஸாம்ராஜ்ய பட்டாபிஷேக தினத்தையொட்டி, காலை 8 மணிக்கு சிறப்பு ஸஹஸ்ர கலச அபிஷேகம் நடைபெறுகிறது.
தொடா்ந்து மாா்ச் 6-ஆம் தேதி வியாழக்கிழமை ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் 430-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, காலை 10 மணிக்கு சிறப்பு ஏகதின லஷ புஷ்பாா்ச்சனை, காலை 10.30-க்கு 1,008 பக்தா்களை கொண்டு கனகாபிஷேக மஹா பூஜை நடைபெறவுள்ளது. விழா நாள்களில் இசை நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழிவு மாலை 6.30 மணியளவில் நடைபெறவுள்ளது.