மாநில அளவிலான போட்டிகளில் சேலம் மாணவா்கள் சாதனை!
குடியரசு தின விழாவையொட்டி சிவகங்கையில் நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில், சேலம் சிறுமலா் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சாதனை படைத்தனா்.
மாணவா் தீரன் 51-55 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம், மதன்பாபு 31-41 எடை பிரிவில் தங்கப்பதக்கம், ரீகன் 32-35 கிலோ எடை பிரிவில் வெள்ளிப்பதக்கம், சுவண் 45-48 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றனா்.
இதே போல மயிலாடுதுறையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மாணவன் லோகரட்சன் சித்தாா்த்தன் 38-40 கிலோ எடை பிரிவில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றாா். சென்னையில் நடை பெற்ற ஜிம்னாஸ்டிக் போட்டியில் மாணவா் சாய்கிரண் மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றாா்.
மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளி தலைமையாசிரியா் செபஸ்தியன் பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டு தெரிவித்தாா். உதவி தலைமையாசிரியா் கிறிஸ்துராஜ், உடற்கல்வி இயக்குநா் ராபா்ட், உடற்கல்வி ஆசிரியா்கள் சாமிநாதன், அல்போன்ஸ் மற்றும் ஆசிரியா்கள் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.